will- attestar

*⚖️ சட்டம் அறிவோம்...*

1)-  உயிலை நிரூபிப்பதற்கு, உயிலின் வரைவைத் தயாரித்தவரை சான்றொப்பமிட்ட சாட்சியாக கருத முடியாது. 
(AIR-2001-SC-3522)&(1996-1-MLJ-481)

2)-   உயிலில் சாட்சியாக கையொப்பம் போடுபவர்கள் அதில் என்ன எழுதப்பட்டிருக்கிறது என்பதை அறிந்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. சாட்சிகள் தங்களது கையெழுத்தை, உயிலை எழுதி வைப்பவரின் முன்பாக போடுதல் வேண்டும். இதுவே போதுமானதாகும். இவ்வாறு நிலைகள் சந்தேகத்தை ஏற்படுத்தாது. சாதாரண முரண்பாடுகள் எல்லாம் சந்தேக சூழ்நிலைகளை ஏற்படுத்தாது. 
(AIR-1997-SC-127)

3)-    உயிலில் சாட்சி கையெழுத்து போட்டவர்களை, உயில் எழுதி வைத்தவர் பார்க்கவில்லை. அதேபோன்று உயிலில் சாட்சி கையெழுத்து போட்டவர்களை உயிலை தயாரித்தவரும் பார்க்கவில்லை. அதனால் உயிலில் சாட்சி கையெழுத்து போட்டது நிரூபிக்கப்படவில்லை. 
(AIR-1998-M. P - 46)

4)-    உயிலானது, உயிலை எழுதி வைத்தவரின் சுதந்திரமான போக்கில் எழுதி வைக்கப்பட்டுள்ளது என்று நீதிமன்றம் திருப்தியடைந்திருத்தல் வேண்டும். 
(1998-2-MLJ-SC-128)

5)-    ஒரே ஒரு சாட்சியை மட்டும் உயிலை நிரூபிக்க விசாரித்தது போதுமானதாகும். (ஆனால் மனநிறைவு அடையாவிட்டால் வெறும் ஒரு சாட்சியை விசாரித்தது மட்டுமே போதுமானதாகாது) 
(AIR-2003-SC-761)

6)-    உயில் பதிவு செய்யப்பட்டது என்ற காரணத்தால் மட்டுமே அந்த உயிலின் மீதான சந்தேக சூழ்நிலைகள் அகன்று விடாது. பதிவு செய்யப்பட்ட உயில் என்றாலும் அதனை சாட்சிகளை கொண்டு நிரூபிக்கவேண்டும். 
(1999-2-MLJ-609)

7)-    Indian Evidence Act - sec 68 - உயிலை எழுதி வைத்தவர் உயிலில் கண்ட சொத்து விவரத்தின் கீழ் கையொப்பமிட்டார். மற்றபடி ஒரு பக்கத்தை தவிர மற்ற பக்கங்களில் கையொப்பம் செய்திருந்தார். எனவே இந்த உயில் செல்லக்கூடியதாகும். 
(AIR-1999-KER-274)

8)-    உயிலை எழுதி வைத்தவர் உயிலில் பெருவிரல் ரேகையைப் பதித்திருந்தார். உயிலை எழுதி வைத்தவருக்கு கையெழுத்து போட தெரியும். எனினும் கையெழுத்து போடததற்கு என்ன காரணம் என்று உயிலில் குறிப்பிடப்படவில்லை . அதற்கான காரணத்தை அறிய சார்பதிவாளர் விசாரிக்கப்பட்டார். ஆனால் அது போதுமானதாக இல்லை. உயில் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. 
(1999-3-MLJ-608)

9)-      அசல் உயில் ஒப்படைக்கப்படவில்லை. உயிலின் சான்றிட்ட நகல் மட்டுமே ஒப்படைக்கப்பட்டது. அது இரண்டாம் நிலை சாட்சியமாகும். அது சான்றாவணமாக அனுமதிக்கப்பட்டது. அசல் உயிலை ஒப்படைக்காதது பாதிப்பை ஏற்படுத்தாது. 
(1999-3-MLJ-651)

10)-    உயில் எழுதப்பட்டு 30 ஆண்டுகள் ஆகிவிட்டது. உயிலில் சாட்சி கையெழுத்து போட்டவர்கள் மற்றும் உயிலை தயாரித்தவர் என அனைவரும் இறந்து விட்டார்கள். இந்த உயிலில் சந்தேகம் எதுவும் இல்லை. இந்த உயிலை உண்மையானது என்று ஊகிக்கலாம். 
(AIR-2002-A. P - 164-NOC)
(1999-3-MLJ-577)


 #will
#attestar

Comments