பட்டா நிலத்துக்கு செல்லும் பொது பாதையை யாரும் ஆக்கிரமிக்க கூடாது.



ராஜம்மாள் என்பவர் ஒரு விவசாயி ஆவார். அவருக்கு சொந்தமாக பட்டா நிலம் உள்ளது, அந்த நிலத்தில் அவர் விவசாயம் செய்து அனுபவித்து வருகிறார், இந்நிலையில் சிலர் ராஜம்மாளின் பட்டா நிலத்திற்கு அருகிலுள்ள பொதுப் பாதையான அரசு புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் அதில் குப்பைகள் மற்றும் மணலை கொட்டி வைத்து ராஜம்மாள் விவசாய நிலத்துக்கு செல்ல தடை ஏற்படுத்தினர். 

இதனால் பட்டா நிலத்திற்கு அவரால் செல்ல முடியவில்லை, விவசாயமும் செய்ய முடியவில்லை, இதனால் பாதிக்கப்பட்ட ராஜம்மாள் மாவட்ட ஆட்சியரிடம் பொதுப் பாதையிலுள்ள ஆக்கிரமிப்பை அகற்றி தர வேண்டும், என்று கோரி மனுத்தாக்கல் செய்தார் மேலும் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திலும் புகார் செய்தார்,
அந்த மனுக்கள் மீது நடவடிக்கை ஏதும் எடுக்காததால் ராஜம்மாள் சென்னை உயர் நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்தார்.

மனுவை விசாரித்த நீதிபதிகள்,
பொதுப் பாதையை யாரும் ஆக்கிரமிப்பு செய்ய முடியாது, அது அனைவரும் பயன்படுத்திக் கொள்ளலாம். 

பாதை ஆக்கிரமிப்பு என்று மனு தாக்கல் செய்யப்பட்டால் உடனடியாக அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். அலட்சியம் காட்டக்கூடாது. 

ராஜம்மாளின் மனு மீது 10 நாட்களுக்குள் நடவடிக்கை எடுத்து ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும், விசாரணை ஏதாவது நடத்த வேண்டும் என்று கலெக்டர் முடிவு செய்தால் ராஜம்மாள் அதற்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். 

அந்த விசாரணையை 10 நாட்களுக்குள் நடத்தி ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்

CASE: W. P. NO - 34103/2016
02.01.2019.

ராஜம்மாள் Vs மாவட்ட ஆட்சியர், திருவண்ணாமலை மாவட்டம் மற்றும் பலர், 2019-1-TLNJ-CIVIL-227

Comments