ஒரு முகவரியில் வசிக்கக் கூடியவர் வேறு முகவரி சம்பந்தமான சொத்துவரி விதிப்பு பற்றிய தகவல்களை கேட்கலாம், அவை மூன்றாம் நபர் தகவல் என மறுக்க கூடாது

ஒரு முகவரியில் வசிக்கக் கூடியவர் வேறு முகவரி சம்பந்தமான சொத்துவரி விதிப்பு பற்றிய தகவல்களை கேட்கலாம், அவை மூன்றாம் நபர் தகவல் என மறுக்க கூடாது என்பதற்கு ஆதாரமான மாநில தகவல் ஆணையத்தின்  ஆணை

சென்னை, என்.எஸ்.சி. போஸ் ரோடு, பாட்னி பிளாசா முதல் தளம், கதவு எண்:90/26 ல் வசிக்கும் பிரகாஷ்குமார் என்பவர் தகவல் பெறும் உரிமைச் சட்டம், பிரிவு 6(1)ன் கீழான தம்முடைய மனுவில் கதவு எண்.7A, திருப்பள்ளி தெரு, சென்னை என்ற முகவரியில் அமைந்த வீட்டின் உரிமையாளர் பற்றிய தகவல், சொத்து வரிவிதிப்பு 1987 முதல் யார் பெயரில் செய்யப்பட்டு வருகிறது, வரிமதிப்பீடு செய்த ரசீது எண் உள்ளிட்ட வரிவிதிப்பு சம்பந்தமாக பல தகவல்கள் கேட்டு சென்னை மாநகராட்சி பொதுத் தகவல் அலுவலரிடம் மனு செய்தார்.

பொதுத் தகவல் அலுவலர் தம்முடைய பதில்  கடிதத்தில்  தகவல் அறியும் உரிமைச் சட்டப் பிரிவு 8(1)(J)ன்படி மனுதாரர் வேறு ஒரு நபர் குறித்த தகவல்களைக் கோருவதால்  அவர் கோரும் தகவல்களை வழங்கிட இயலாது என்று தெரிவித்துள்ளார்.

அதனை எதிர்த்து மனுதாரர் செய்த இரண்டாம் மேல்முறையீட்டின் மீது விசாரணை நடத்தப்பட்டு,

தகவல் அறியும்  உரிமைச் சட்டப் பிரிவு 8(1)(J)ன்படி மனுதாரர் வேறு ஒரு நபர் குறித்த தகவல்களைக் கோருவதால்  அவர் கோரும் தகவல்களை வழங்கிட இயலாது என்று பொது அதிகார அமைப்பு கூறுவதனை இவ்வாணையத்தால் ஏற்றுக் கொள்ள இயலவில்லை

என்று கூறி மனுதாரர் கூறும் அனைத்து இனங்களுக்கான தகவல்களையும் 15 நாட்களுக்குள் வழங்க வேண்டுமென்று சென்னை மாநகராட்சி மேல்முறையீட்டு அதிகாரிக்கு மாநில தகவல் ஆணையம் உத்தரவிட்டது. (மாநில தகவல் ஆணைய வழக்கு எண்: 25415/விசாரணை/D/2013 ; நாள்: 22.01.2014)

Comments