1.12.2012 க்கு முன்பாக எழுதிக் கொள்ளப்படும் பவர் ஆவணத்தை கட்டாயமாக பதிவு செய்ய வேண்டும் என்ற தேவையில்லை - நோட்டரி பப்ளிக் முன்பு எழுதி கொள்ளப்படும் பவர் ஆவணத்தை நீதிமன்றத்தில் ஒரு சாட்சியமாக பயன்படுத்தலாம்

MADRAS HIGH COURT

DATED: 06.08.2024

JUSTICE V.LAKSHMINARAYANAN

C.R.P.(PD).No.2945 of 2024

G.Indirani And Others Vs A.Naveen Kumar

1.12.2012 க்கு முன்பாக எழுதிக் கொள்ளப்படும் பவர் ஆவணத்தை கட்டாயமாக பதிவு செய்ய வேண்டும் என்ற தேவையில்லை. பவர் ஆவணம் பதிவுச் சட்டம் பிரிவு 18 ன் கீழ் விருப்பமிருந்தால் பதிவு செய்து கொள்ளலாம். பவர் ஆவணம் சொத்தின் உரிமை ஆவணம் கிடையாது. அது ஒரு Non Testamentary Instrument ஆகும். பவர் ஆவணம் சொத்துரிமை மாற்றுச் சட்டத்தின் கீழ் வராது. அது இந்திய ஒப்பந்த சட்டத்தின் கீழ் வரும். நோட்டரி பப்ளிக் முன்பு எழுதி கொள்ளப்படும் பவர் ஆவணத்தை நீதிமன்றத்தில் ஒரு சாட்சியமாக பயன்படுத்தலாம். நோட்டரி பப்ளிக் முன்பு எழுதி கொள்ளப்படும் ஆவணத்தை இந்திய சாட்சிய சட்டம் பிரிவு 85 ன்படி உண்மையான ஆவணமாக அனுமானிக்க வேண்டும் என்று இந்த தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

Comments